R.Tharaniya / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
1930: ஆர்ஜென்டின ஜனாதிபதி ஹிபோலிட்டோ வைரிகோயென் இராணுவப் புரட்சி மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
1939: 2 ஆம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக தென்னாபிரிக்கா போர்ப் பிரகடனம் செய்தது.
1952:கனடாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1970: ஐரோப்பாவிலிருந்து நியூயோர்க்கிற்கு சென்றுகொண்டிருந்த இரு விமானங்கள் ஒரே நேரத்தில் பலஸ்தீன தீவிரவாதிகளால் ஜோர்தானுக்கு கடத்தப்பட்டன.
1972: ஜேர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது 'கறுப்பு செப்டெம்பர்' எனும் பலஸ்தீன தீவிரவாத குழுவினால் கடத்தப்பட்டிருந்த இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் 9 பேர் மீட்பு முயற்சியின்போது கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டனர். முதல்நாள் நடந்த கடத்தலின்போது இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
1983: சோவியத் யூனியன் வான்பரப்பில் ஊடுருவிய கொரிய பயணிகள் விமானமொன்றை சுட்வடுவீழ்த்தியதை சோவியத் யூனியன் ஒப்புக்கொண்டது. அது பயணிகள் விமானம் என சோவியத் யுத்த விமானத்தின் விமானி அறிந்திருக்கவில்லை என சோவியத் யூனியன் கூறியது.
1982: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 31 பேர் பலி.
1991: ரஷ்யாவின் லெனின்கிராட் நகரத்தின் பெயர் மீண்டும் சென் பீற்றர்ஸ்பேர்க் என மாற்றப்பட்டது.
1997: இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
20 minute ago
48 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
48 minute ago
56 minute ago