R.Tharaniya / 2025 செப்டெம்பர் 21 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
1502: கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது நான்காவது நாடுகாண் பயணத்தின்போது கொஸ்டாரிக்காவில் தரையிறங்கினார்.
1906: ஹொங்கொங்கில் ஏற்பட்ட சுனாமி மற்றும் சூறாவளியினால் சுமார் 10000 பேர் பலி.
1932: அரேபிய தீபகற்பத்தில் பல இராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து சவூதி அரேபியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.
1943: பிரித்தானிய நீர்மூழ்கி கப்பலொன்றினால் ஜப்பானிய கப்பலொன்று தாக்கப்பட்டதால் 5620 பேர்பலி.
1961: ஐ.நா. செயலாளர் நாயகம் டக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட், கொங்கோவில் சமாதான பேச்சுவார்த்தையொன்றில் பங்குபற்றச் சென்றபோது ரொடீஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) இடம்பெற்ற விமான விபத்தில் பலியானார்.
1968: இந்திய உளவுத்துறை நிறுவனம் றா அமைப்பு உருவாக்கப்பட்டது.
1972: இடி அமீனினால் விரட்டப்பட்ட முதல் தொகுதி உகாண்டா மக்கள் ஐக்கிய இராச்சியத்தை வந்தடைந்தனர்.
1974: ஹொண்டுராஸில் ஏற்பட்ட சூறாவளியினால் சுமார் 5000 பேர்பலி.
1977: வெயேஜர் -1 விண்கலம் சந்திரனையும் பூமியையும் முதல் தடவையாக ஒன்றாக படம் பிடித்தது.
1987: அணுவாயுதங்களை குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கையெழுத்திட்டன.
1991: அமெரிக்க ஊடகத்துறை கோடீஸ்வரர் டெட் டர்னர், ஐ.நாவுக்கு 100 கோடி அமெரிக்க டொலர் நன்கொடை வழங்கினார்.
2006: அம்பாறையில் 11 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2007: மியன்மாரில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் இணைந்துகொண்டனர். இது 'காவிப் புரட்சி' என அழைக்கப்பட்டது.
12 minute ago
25 minute ago
33 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
33 minute ago
33 minute ago