Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 26 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1907 : நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும் பிரித்தானியப் பேரரசின் டொமினியன்களாயின.
1918 : முதலாம் உலகப் போர் - அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ் - ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம்.
1934 : ஆர்.எம்.எசு. குயீன் மேரி நீராவிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1944 : இரண்டாம் உலகப் போர் - மார்கெட் கார்டன் நடவடிக்கை தோல்வியடைந்தது.
1950 : ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றினர்.
1950 : இந்தோனேஷியா ஐநாவில் இணைந்தது.
1954 : ஜப்பானில் இடம்பெற்ற புயலில் சிக்கி, கப்பல் ஒன்று மூழ்கியதில் 1,172 பேர் கொல்லப்பட்டனர்.
1960 : ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் தொலைக்காட்சி நேரடி விவாதம், ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜோன் எஃப். கென்னடிக்கும் இடையில் இடம்பெற்றது.
1960 : பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.
1962 : யேமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது.
1973 : அத்திலாந்திக் மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை கொன்கோர்ட் விமானம் பறந்து காட்டியது.
1983 : அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை, ஒரு கணினியின் தவறு என்பதை சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து, அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.
1984 : ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை சீனாவிடம் கையளிக்க ஒப்புக் கொண்டது.
1987 : தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன், இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, நீரும் அருந்தா உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்தார்.
1997 : இந்தோனேஷிய விமானம் மெடான் அருகே விபத்துக்குள்ளாகியதில், 234 பேர் கொல்லப்பட்டனர்.
1997 : இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் அசிசியின் பிரான்சிஸ் தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்தியது.
2002 : செனெகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
2007 : வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
2008 : சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, வெசு ரொசி ஆங்கிலக் கால்வாயை ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.
7 minute ago
18 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
41 minute ago
48 minute ago