Janu / 2024 ஜூன் 05 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1849: டென்மார்க் அரசிலமைப்பின்படி முடிக்குரிய இராஜ்ஜியமாகியது.
1917: அமெரிக்காவில் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு ஆரம்பமாகியது.
1942: 2 ஆம் உலக யுத்தத்தில் பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மீது அமெரிக்கா யுத்தப் பிரகடனம் செய்தது.
1944: பிரித்தானிய குண்டு வீச்சு விமானங்கள் நோர்மன்டி கரையோரத்தில் ஜேர்மன் நிலைகள் மீது சுமார் 5000 தொன் எடையுள்ள குண்டுகளை வீசின.
1967: எகிப்து, ஜோர்டான், சிரியா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. 6 நாள் யுத்தம் ஆரம்பம்.
1959: முதலாவது சிங்கப்பூர் அரசாங்கம் பதவியேற்றறது.
1968: படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடியின் இளைய சகோதரரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ரொபர்ட் எவ். கென்னடி துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தார். மறுநாள் அவர் உயிரிழந்தார்.
1975: 6 நாள் யுத்தத்தின் பின் சுயஸ் கால்வாய் முதல் தடவையாக திறக்கப்பட்டது.
1979: இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.
1995: போஸ்-ஐன்ஸ்டீன் செறிபொருள் முதன் முதலில் உருவாக்கப்பட்டது.
2000: உகண்டா மற்றும் ருவண்டா இராணுவத்துக்கிடையில் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தொடர்ந்து 6 நாட்களாக இடம்பெற்ற போரில், கிசாங்கனியின் நகரமொன்று அழிக்கப்பட்டது.
2005: வரலாற்றில் முதல் தடவையாக, குவைட் மாநகரசபைக்கு இரு பெண்கள் நியமிக்கப்பட்டனர். பாத்திமா அல்-சபா மற்றும் பவ்ஸியா அல்-பார் ஆகிய இருவருமே அவ்விரு பெண்களாவர்.
2006: செர்பியா மற்றும் மாண்டினீக்ரோ குடியரசிலிருந்து செர்பியா சுதந்திர பிரகடனத்தை அறிவித்தது.
2013: பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீப்பை மூன்றாவது முறையாக அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

17 minute ago
38 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
38 minute ago
45 minute ago