Janu / 2024 நவம்பர் 27 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1895: தனது சொத்துக்களில் 94 சதவீதம் நோபல் பரிசை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தனது கடைசி உயிலில் அல்பிரட் நோபல் கையெழுத்திட்டார்.
1944: பிரித்தானிய விமானப்படை ஆயுதக் களஞ்சியமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 70 பேர் பலி.
1964: அணு ஆயுத பரிசோதனைகளை நிறுத்துமாறும் ஆயுதக்களைவை ஆரம்பிக்குமாறும் அமெரிக்கா, சோவியத் யூனியனிடம் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு கோரினார்.
1975: கின்னஸ் சாதனை நூல் ஸ்தாபகரும் தொலைக்காட்சி அறிவிப்பாளருமான ரோஸ் மெக்வேர்டர் லண்டனில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1983: ஸ்பெய்னின் மட்ரிட் நகருக்கு அருகில் விமானம் வீழ்ந்ததால் 181 பேர் பலி.
1999: நியூஸிலாந்தின் முதலாவது பெண் பிரதமராக ஹெலன் கிளார்க் தெரிவானார்.
2005: உலகின் முதலாவது பகுதியளவு முகமாற்றுச் சிகிச்சை பிரான்ஸில் நடைபெற்றது.
2006: ஐக்கிய கனடாவுக்குள் கியூபெக் ஒரு தேசமாக இருக்குமென்ற பிரதமர் ஸ்டீபன் ஹார்பரின் முன்மொழிவை கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

23 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
59 minute ago