Freelancer / 2025 பெப்ரவரி 04 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

1789: அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்கத் தேர்தல் கல்லூரியினால் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
1794: பிரான்ஸில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது.
1797: ஈக்குவடோர் பூகம்பத்தில் 40000 பேர் பாதிப்பு.
1899: பிலிப்பைன்ஸ் - அமெரிக்க யுத்தம் ஆரம்பம்.
1948: பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது.
1966: ஜப்பானில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 133 பேர் பலி.
1976: கௌதமாலா பூகம்பத்தில் 22,000 பேர் பலி.
1997: இஸ்ரேலின் இரு இராணுவ ஹெலிகொப்டர்கள் வானில் மோதிக்கொண்டதால் 73 பேர் பலி.
1997: 1996 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் வெற்றியை ஏற்க மறுத்துவந்த சேர்பிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக், எதிர்க்கட்சிகளின் வெற்றியை ஒப்புக்கொண்டார்.
1998: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 5000 பேர் பலி.
2003: யூகோஸ்லாவிய சமஷ்டி குடியரசின் பெயர் சேர்பியா-மொன்டேநீக்ரோ என உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்டது.
2002: உலகின் மிகப்பெரிய சுயாதீன புற்றுநோய் ஆய்வு நலநிதியமான பிரித்தானிய புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.
2004: உலகின் மிகப் பிரபலமான சமூகவலையமைப்பு இணையத்தளமான பேஸ்புக், மார்க் ஸுகர்பேர்க்கினால் ஆரம்பிக்கப்பட்டது.
2006: பிலிப்பைன்ஸ் அரங்கொன்றில் ஏற்பட்ட சனநெரிசலினால் 71 பேர் பலி
22 minute ago
29 minute ago
39 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
39 minute ago
46 minute ago