Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 பெப்ரவரி 14 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1779 – அவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டார்.
1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஜிப்ரால்ட்டர் அருகே இடம்பெற்ற கடல்சமரில் ஒரசியோ நெல்சன் தலைமையில் பிரித்தானியக் கடற்படை எசுப்பானியக் கடற்படையை வென்றது.
1804 – உதுமானியப் பேரரசுக்கு எதிரான செர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்சே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது.
1815 – கண்டிப் போர்கள்: கண்டி இராச்சியத்தைப் பிரித்தானியர் கைப்பற்றினர். கண்டி ஒப்பந்தம் மார்ச் 2 இல் கையெழுத்திடப்பட்டது.
1859 – ஓரிகன் 33வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1876 – எலீசா கிறே, அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: உருசியாவில் ரசுத்தோவ் நகர் நாட்சிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: துனிசியப் போர்த்தொடர்: தூனிசியாவில் நேச நாடுகளின் நிலைகள் மீது தாக்குதல்கள் ஆரம்பித்தன.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கி ஒன்று மலாக்கா நீரிணையில் செருமனி-இத்தாலிய நீர்மூழ்கியத் தாக்கி மூழ்கடித்தது.
1946 – இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.
1949 – இஸ்ரேலிய நாடாளுமன்றம் முதற்தடவையாகக் கூடியது.
1961 – 103வது தனிமம் இலாரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
1966 – அவுஸ்திரேலியாவில் முன்னர் பயன்பாட்டில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.
1979 – ஆப்கானித்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார்.
1981 – டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 48 பேர் உயிரிழந்தனர்.
1987 – யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1989 – ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது
.1989 – யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் பேரழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.
1989 – சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ரூகொல்லா கொமெய்னி மரண தண்டனை விதித்தார்.
1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.
2000 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.
பெப்ரவரி 14- உலகளவில் காதலரகள் இன்றைய தினத்தை காதலர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago