Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 15 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
1214 – ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர்.
1493 – கிறித்தோபர் கொலம்பசு நீனா என்ற கப்பலில் பயணம் செய்யும் போது, புதிய உலகத்தில் தாம் கண்ட அதிசயங்களை விபரித்து கடிதங்கள் எழுதினார்.
1637 – புனித உரோமைப் பேரரசராக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினார்.
1796 – டச்சுக்களின் வசம் இருந்த கொழும்பு நகரைப் பிரித்தானியர் கைப்பற்றினர்.
1798 – முதலாம் நெப்போலியனின் தளபதி லூயி-அலெக்சாண்டர் பெர்த்தியர் உரோம் நகரை ஐந்து நாட்களுக்கு முன்னர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து உரோமைக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
1865 – இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பாரசீக வளைகுடா ஊடான தந்தி சேவை ஆரம்பமானது.
1898 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் மெயின் கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.
1909 – மெக்சிக்கோ, அகபல்கோ நகரில் நாடக அரங்கு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர்.
1920 – யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.
1923 – கிரேக்கம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்ட கடைசி ஐரோப்பிய நாடானது.
1933 – மயாமியில் அமெரிக்க அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பிராங்க்ளின் ரூசவெல்ட்டைக் கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த கியூசெப் சங்காரா என்பவன், பதிலாக சிகாகோ நகர முதல்வர் அன்டன் செர்மாக்கை சுட்டுக் காயப்படுத்தினான். படுகாயமடைந்த செர்மாக் மார்ச் 6 இல் இறந்தார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் போர்: ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் அவுஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் மோண்ட்டி கசீனோ சண்டை ஆரம்பமானது.
1945 – இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான சோல்பரி ஆணைக்குழு முன்னிலையில் தமிழருக்கு சம உரிமைக்கான 'ஐம்பதுக்கு ஐம்பது' கோரிக்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியால் முன்வைக்கப்பட்டது.
1946 – எனியாக் என்ற முதல் தலைமுறைக் கணினி பிலடெல்பியா, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அறிமுகமானது.
1950 – சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
1952 – ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் உடல் வின்ட்சர் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.
1961 – பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் அமெரிக்க பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் உட்பட செய்த அனைத்து 73 பேரும் உயிரிழந்தனர்.
1972 – ஐந்தாவது தடவையாக எக்குவடோர் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்த ஒசே மரியா இபாரா இராணுவப் புரட்சியில் பதவி இழந்தார்.
1982 – நியூபவுண்ட்லாந்து தீவில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 84 தொழிலாலர்கள் உயிரிழந்தனர்.
1989 – ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானித்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.
1991 – செக்கோசிலோவாக்கியா, அங்கேரி, போலந்து ஆகிய கம்யூனிச நாடுகள் திறந்த-சந்தைப் பொருளாதாரத்தை முன்னெடுக்க உடன்பாடு கண்டன.
1994 – உருசியா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.
1996 – சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் உயிரிழந்தனர்.
2001 – முழுமையான மனித மரபணுத்தொகை நேச்சர் இதழில் வெளியானது.
2003 – ஈராக்கியப் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் 600 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டன. 8 முதல் 30 மில்லியன் மக்கள் வரை இதில் பங்குபற்றினர்.
2010 – பெல்சியத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர், 171 பேர் காயமடைந்தனர்.
2012 – ஒந்துராசில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 பேர் உயிரிழந்தனர்.
2013 – உருசியாவில் எரிவெள்ளி ஒன்று வெடித்ததில், 1,500 பேர் காயமடைந்தனர்
25 minute ago
39 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago
40 minute ago