Janu / 2024 பெப்ரவரி 16 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1646 – இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
1742 – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1838 – தென்னாபிரிக்காவில் நாட்டல் என்னுமிடத்தில் சூலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் வரை படுகொலை செய்யப்பட்டனர்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: யுலிசீஸ் கிராண்ட் டென்னிசியில் டொனெல்சன் கோட்டையைக் கைப்பற்றினார்.
1918 – லித்துவேனியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1923 – ஹாவர்ட் கார்ட்டர் பண்டைய எகிப்திய மன்னர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார்.
1934 – அவுஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1937 – அமெரிக்காவின் வாலஸ் கரோத்தர்ஸ் நைலோனுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஆல்ட்மார்க் சம்பவம்: ஜேர்மனிய கப்பல் ஆல்ட்மார்க்கினுள் நுழைந்த பிரித்தானியக் கடற்படையினர் 299 பிரித்தானியக் கைதிகளை விடுவித்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனைப் படைகள் கார்கீவ் நகரினுள் நுழைந்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.
1945 – இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான சோல்பரி ஆணைக்குழு முன்னிலையில் தமிழருக்கு சம உரிமைக்கான 'ஐம்பதுக்கு ஐம்பது' கோரிக்கை தமிழ்க் காங்கிரசு கட்சியால் முன்வைக்கப்பட்டது.
1959 – ஜனவரி 1 இல் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.
1962 – மேற்கு ஜேர்மனியின் கரைப்பகுதிகளைத் தாக்கிய வடகடல் வெள்ளத்தினால் 315 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் வரை வீடுகளை இழந்தனர்.
1978 – முதலாவது கணினி அறிக்கைப் பலகை சிகாகோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1983 – அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 75 பேர் உயிரிழந்தனர்.
1985 – இஸ்புல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

13 minute ago
20 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
24 minute ago