2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 04

Editorial   / 2021 மே 04 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1904: பனாமா கால்வாய்க்கான கட்டுமானம், ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.

1919: மே நான்கு இயக்கம் - சீனாவின் பிராந்தியங்கள், ஜப்பானுக்கு வழங்கப்பட்ட வெர்சாய் ஒப்பந்தத்தை எதிர்த்து, தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள தியானன்மென் சதுக்கத்தில், மாணவர் போராட்டமொன்ற நடத்தப்பட்டது.

1926: ஐக்கிய இராச்சியத்தில், பொது வேலைநிறுத்தம் ஆரம்பமானது.

1930: மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு, யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1942: இரண்டாம் உலகப் போர் - ஜப்பானால் முதல் நாள் கைப்பற்றப்பட்ட துளகிதீவு மீது, அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.

1945: இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியின் ஆம்பூர்க் நகரிலிருந்த நியூவென்காம் வதை முகாமை, பிரித்தானிய இராணுவத்தினர் விடுவித்தனர்.

1945: இரண்டாம் உலகப் போர் - வடக்கு ஜேர்மனி, பிரித்தானியாவிடம் சரணடைந்தது.

1949: அகில மலாயா தொழிற்சங்கச் சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ்.ஏ.கணபதி, மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால், கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

1949: இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தில், டொரினோ கால்பந்தாட்ட அணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.

1953: ஏர்னெஸ்ட் ஹெமிங்வே கிழவனும் கடலும் என்ற புதினத்துக்காக, புலிட்சர் பரிசு பெற்றார்.

1959: முதலாவது கிராமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

1978: தென்னாப்பிரிக்கப் பாதுகாப்புப் படைகள், தெற்கு அங்கோலாவின் சுவாப்போ இயக்க முகாம் ஒன்றைத் தாக்கி, 600 பேரைக் கொன்றனர்.

1979: மார்கரெட் தட்சர், ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார்.

1990: லாத்வியா, சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மீண்டும் விடுதலையை அறிவித்தது.

1994: இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசிர் அரஃபாத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டின்படி, காசாக் கரையில், பாலஸ்தீனியர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது.

2002: நைஜீரியாவின் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில், 148 பேர் கொல்லப்பட்டனர்.

2021: மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரபல செல்வந்தருமான பில்கேட்ஸ் தனது மனைவி மெலின்டாவுடனான 27 ஆண்டுகால திருமணவாழ்வை முடிவிற்கு கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக அறிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .