R.Tharaniya / 2025 மே 20 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
1904 : பாரிசில் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (பீஃபா) ஆரம்பிக்கப்பட்டது.
1917 : அமெரிக்காவின் அட்லான்டா மாநிலத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.
1939 : கனடாவில் தேசியப் போர் நினைவகம் ஒட்டாவாவில் பிரித்தானியாவின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் திறந்து வைக்கப்பட்டது.
1941 : இரண்டாம் உலகப் போர் - பிரேஸிலிலிருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜேர்மனியின் யூ - படகினால் மூழ்கடிக்கப்பட்டது.
1972 : மைக்கலாஞ்சலோவின் பியேத்தா ஓவியம், உரோம் நகரில் புனித பேதுரு பேராலயத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஹங்கேரிய நிலவியலாளர் ஒருவரால் சேதப்படுத்தப்பட்டது.
1976 : கலிபோர்னியாவில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 29 பேர் உயிரிழந்தனர்.
1991 : முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.
1991 : எதியோப்பியாவின் கம்யூனிஸ அரசுத் தலைவர் மெங்கிஸ்து ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1996 : தான்சானியாவில் பூக்கோவா என்ற பயணிகள் கப்பல் விக்டோரியா ஏரியில் மூழ்கியதில் 1,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1998 : இந்தோனேசியாவில் ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து அந்நாட்டை 32 ஆண்டுகள் ஆட்சி செய்த சுகார்த்தோ அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
2001 : பிரான்சில் அத்திலாந்திக் அடிமை வணிகம் மற்றும் அடிமைத் தொழில்கள் மானுடத்துக்கு எதிரான குற்றங்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
2003 : வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த 6.8 அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2006 : செர்பியா - மொண்டெனேகுரோவில் இருந்து விலகுவதற்கான பொது வாக்கெடுப்பு மொண்டெனேகுரோ குடியரசில் இடம்பெற்றது. 55% மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2012 : யெமன், சனா நகரில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றதில் 120 பேர் கொல்லப்பட்டனர்.
10 minute ago
15 minute ago
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
25 minute ago
38 minute ago