R.Tharaniya / 2025 மே 22 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
334: மகா அலெக்ஸாண்டரின் மெசிடோனிய படை பேர்சியவின் 3 ஆம் டேரியஸ் மன்னின் படையை தோற்கடித்தது.
1762: சுவீடனும் பிரஸ்யாவும் ஹம்பர்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1809: வியன்னாவுக்கு அருகில் நடைபெற்ற அஸ்பேர்ன் ஈஸ்லிங் யுத்தத்தில் நெப்போலியன் முதல் தடவையாக தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்டார்.
1906: அமெரிக்காவில் ரைட் சகேதரர்கள் தமது 'பறக்கும் இயந்திரத்திற்கான' காப்புரிமையைப் பெற்றனர்.
1915: ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 227 பேர் பலி.
1958: இலங்கையில் இனக்கலவரம் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
1960: சிலியில் 9.5 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. சுமார் 6000 பேர் பலியாகினர். இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய பூகம்பம் இதுவாகும்.
1962: அமெரிக்காவில் விமானமொன்றில் குண்டு வெடித்ததால் 45பேர் பலியாகினர்.
1968: அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கியொன்று 99 பேருடன் கடலில் மூழ்கியது.
1972: இலங்கையில் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. இலங்கை குடியரசாகியது. சிலோன் எனும் அதன் பெயர் ஸ்ரீலங்காவாக மாற்றப்பட்டது.
8 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 Jan 2026