R.Tharaniya / 2025 மே 25 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
1798: பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக அயர்லாந்தில் கிளரச்சி ஆரம்பித்தது.
1832: முதலாவது கிறீஸ் இராஜ்ஜியம் லண்டன் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது.
1844: சாமுவேல் மோர்ஸ் முதலாவது டெலிகிராவ் தகவலை அமெரிக்காவின் பழைய உயர் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து அமெரிக்க தலைநகரிலுள்ள தனது உதவியாளர் அல்பிரட் வெய்லுக்கு அனுப்பினார்.
1948: அரபு - இஸ்ரேல் யுத்தத்தில் இஸ்ரேலின் கிப்புட்ஸ் நகரை எகிப்து கைப்பற்றியது.
1976: முதலாவது கொன்கோர்ட் விமான சேவை லண்டனிலிருந்து வாஷிங்டனுக்கு ஆரம்பிக்கப்பட்டது.
1980: ஈரானில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களை விடுவிக்குமாறு சர்வதேச நீதிமன்றம் கோரியது. எனினும் அடுத்த ஜனவரி வரை அக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை.
1991: எத்தியோப்பியாவிடமிருந்து எரித்திரியா சுதந்திரம் பெற்றது.
1991: எத்தியோப்பியாவிலுள்ள யூதர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது.
1994: 1993 ஆம் அண்டின் உலக வர்த்தக நிலைய குண்டுத்தாக்குதலில் குற்றவாளிகளாக காணப்பட்ட நால்வருக்கு 240 வருடகால சிறைத்தண்டனை அனுபவிக்கப்பட்டது.
2000: தென் லெபனானிலிருந்து 22 வருடங்களின்பின் இஸ்ரேலிய படைகள் வெளியேறின.
2001: 15 வயதான ஷேர்ப்பா டெம்பா டிஷேரி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மிக இளமையான நபர் எனும் சாதனைக்குரியவரானார்.
2002: அமெரிக்காவும் ரஷ்யாவும் மொஸ்கோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
2006: விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.
2007: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்தனர்.
2007: கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்து நால்வர் காயமடைந்தனர்.
8 minute ago
13 minute ago
23 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
23 minute ago
36 minute ago