Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2018 மே 25 , மு.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
1914: அயர்லாந்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டமூலம், ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1953: அணுகுண்டு சோதனை - நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.
1955: ஐக்கிய அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில், "உடால்" என்ற சிறு நகரை, இரவுநேர சுழல்காற்று தாக்கியதில், 80 பேர் உயிரிழந்தனர்.
1961: அப்பல்லோ திட்டம் - பத்தாண்டுகளின் இறுதிக்குள், சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை, அதிபர் ஜோன் எஃப். கென்னடி, அமெரிக்கக் காங்கிரஸில் அறிவித்தார்.
1963: அடிஸ் அபாபாவில், ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.
1977: வில்லியம் சேக்ஸ்பியரின் இலக்கியங்கள் மீதான தடையை, சீனா நீக்கியது. 1966இல் ஆரம்பமான சீனப் பண்பாட்டுப் புரட்சி, முடிவுக்கு வந்தது.
1979: ஐக்கிய அமெரிக்காவின் டிசி10 விமானம் ஒன்று, ஓஹேர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 271 பேரும், தரையில் இருவரும் கொல்லப்பட்டனர்.
1981: ரியாத் நகரின் பஹரேன், குவைட், ஓமான், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையேயான வளைகுடா கூட்டுறவுப் பேரவை உருவானது.
1982: போக்லாந்து போரில், கவெண்ட்ரி என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.
1985: பங்களாதேஷில் இடம்பெற்ற சூறாவளியில், 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1997: சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில், அதிபர் அஹமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.
2000: லெபனானில் 22 ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
2002: சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் உயிரிழந்தனர்.
2002: மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில், 197 பேர் கொல்லப்பட்டனர்.
2008: நாசாவின் பீனிக்சு விண்ணூர்தி செவ்வாயில் தரையிறங்கியது.
2012: டிராகன் விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைந்த முதலாவது வர்த்தக விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
40 minute ago
56 minute ago