R.Tharaniya / 2025 ஜூன் 01 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
1902: இரண்டாம் பூவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா, பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.
1910: தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.
1911: டைட்டானிக் கப்பல், வட அயர்லாந்து, பெல்ஃபாஸ்ட் நகரில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1911: மெக்சிக்கோ புரட்சி - மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் பொர்பீரியோ தீயாசு, நாட்டை விட்டு வெளியேறினார்.
1921: அமெரிக்காவில் ஓக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது, 39 கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
1935: பாகிஸ்தானின் குவெட்டா நகரில், 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில், 40,000 பேர் உயிரிழந்தனர்.
1941: ஆங்கில - ஈராக்கியப் போர் - ஐக்கிய இராச்சியம் ஈராக்கை மீளக் கைப்பற்றியது.
1942: இரண்டாம் உலகப் போர் - ஜப்பானியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைத் தாக்கின.
1961: தென்னாபிரிக்கா, பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.
1962: மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
1970: பெருவில் இடம்பெற்ற 7.9 அளவு நிலநடுக்கத்தில், யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டது. இதில், 70,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 50,000 பேர் காயமடைந்தனர்.
1973: சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம், 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில், அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
1997: கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் திறக்கப்பட்டது.
1981: யாழ்ப்பாணத்தின் பல இடங்களில், நள்ளிரவில் வன்முறைகள் ஆரம்பமாயின. யாழ். பொது நூலகம், அடுத்த நாள் எரியூட்டப்பட்டது.
2004: இலங்கை பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன், மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2005: இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப், கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2017: காபூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் குண்டுத் தாக்குதலில், 90 பேர் கொல்லப்பட்டனர், 463 பேர் காயமடைந்தனர்.
8 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 Jan 2026