2025 மே 08, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 04

Menaka Mookandi   / 2017 ஏப்ரல் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1581: உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

1721: சேர் ரொபர்ட் வால்போல் பிரிட்டனின் முதலாவது பிரதமரானார்.

1814: நெப்போலியன் முதற்தடவையாக முடி துறந்து தனது மகன் இரண்டாம் நெப்போலியனை அரசனாக அறிவித்தார்.

1841: அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் ஹென்றி ஹரிசன், நுரையீரல் அழற்சியினால் காலமானார். பதவியில் இருக்கும் போது இறந்த முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் இவராவார்.

1818: 13 கோடுகளும் 20 நட்சத்திரங்களும் கொண்ட அமெரிக்க தேசிய கொடி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

1850: இங்கிலாந்தின் கொட்டன்ஹாம் என்ற ஊரின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.

1865: அமெரிக்க உள்நாட்டுப் போர் - கூட்டுப் படைகள் வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள், ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்கு விஜயம் செய்தார்.

1866: ரஷ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் கீவ் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பித்தார்.

1905: இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1925: ஜேர்மனியில் எஸ்.எஸ் காவல்படை என அழைக்கப்படும் சுத்ஸ்டாப்பெல் அமைக்கப்பட்டது.

1939: ஈராக்கில் இரண்டாம் பைஸால் மன்னரானார்.

1944: இரண்டாம் உலகப் போர் - ஆங்கிலோ-அமெரிகப் படையினரால் புக்கரெஸ்ட் நகர் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்கலில் குறைந்தது 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1945: இரண்டாம் உலகப் போர் - சோவியத் இராணுவத்தினர் ஹங்கேரியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

1949 - பன்னிரண்டு நாடுகள், ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.

1960: செனிகல் மற்றும் பிரெஞ்சு சூடானை உள்ளடக்கிய மாலி கூட்டமைப்புக்கு விடுதலை தர பிரான்ஸ் ஒப்புக் கொண்டது.

1968: அமெரக்காவில் கறுப்பினத்தவர்களின் உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலை செய்யப்பட்டார்.

1968: அப்பல்லோ 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1969: டெண்டன் கூலி என்பவர் உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.

1973: உலக வர்த்தக மையம், நியூயோர்க் நகரில் நிறுவப்பட்டது.

1975: மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், பவுல் ஆல்லென் ஆகியோரின் கூட்டில் ஆல்புகெர்க்கியில் தொடங்கப்பட்டது.

1975: வியட்நாம் போர் - சாய்கோன் நகரில் அனாதைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 172பேர் கொல்லப்பட்டனர்.

1976: இளவரசர் நொரடோம் சீயனூக், கம்போடியாவின் அரசுத் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இவர் பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

1979: பாகிஸ்தானின் முன்னாள் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

1983: சலேஞ்சர் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.

1984: அமெரிக்கத் தலைவர் ரொனல்ட் ரேகன், வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்யும் கோரிக்கையை முன்வைத்தார்.

1999: பாப்பரசரின் வேண்டுகோளையும் புறக்கணித்து நேட்டோ வான்படைகள் உயிர்த்த ஞாயிறு நாளன்று முன்னாள் யூகொஸ்லாவியா மீது குண்டுகளை வீசின.

2002: அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X