Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
1066: பிரான்ஸை சேர்ந்த வில்லியமின் படைகள் இங்கிலாந்தைக் கைப்பற்றின. இங்கிலாந்து மன்னன் இரண்டாம் ஹரோல்ட்டைக் கொலை செய்தன.
1322: ஸ்கொட்லாந்தின் ரொபர்ட் புரூஸ், இங்கிலாந்து மன்னன் இரண்டாம் எட்வர்ட்டை பேலாண்ட் எனும் இடத்தில் தோற்கடித்தார். இதனால் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை இரண்டாம் எட்வர்ட் ஏற்றுக்கொள்ள நேரிட்டது.
1912: அமெரிக்க ஜனாதிபதி உட்ரோல் வில்ஸன், விஸ்கொன்ஸின் மாநிலத்தில் பிரசாரமொன்றில் பங்குபற்றியபோது ஜோன் ஷ்ராங்க் என்பவரால் சுடப்பட்டார். உட்ரோ வில்ஸனின் மார்பில் குண்டுபாய்ந்து காயமேற்பட்டது.
1933: ஹிட்லர் தலைமையிலான நாஸி ஜேர்மனி, லீக் ஒவ் நேஷனிலிருந்து விலகியது.
1944: ஜேர்மனியின் நாஸிப் படைகளிடமிருந்து கிறீஸின் ஏதென்ஸ் நகரத்தை பிரித்தானிய படைகள் கைப்பற்றின.
1947: அமெரிக்க விமானப்படையின் கப்டன் சக் யீகர், சோதனை விமானமொன்றை முதல் தடவையாக ஒலியைவிட வேகமாக செலுத்தினார்.
1956: இந்திய சட்டமேதை கலாநிதி பி.ஆர். அம்பேத்கார் தன்னை பின்பற்றும் 385000 பேரை பௌத்த மதத்திற்கு மாற்றினார்.
1981: எகிப்தில் ஜனாதிபதி அன்வர் சதாத் சுட்டுக்கொல்லப்பட்டு ஒருவாரத்தின்பின் உப ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஜனாதிபதியாக பதவியேற்றார். இப்போதும் அவரே ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார்.
1994:பலஸ்தீன விடுதலை இயக்கத்தலைவர் யஸீர் அரபாத்திற்கும் இஸ்ரேல் பிரதமர் யிட்ஸாக் ரபின் மற்றும் வெளிவிவகார அமைச்சர் சிமோன் பெரோஸ் ஆகியோருக்கும் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago