Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 ஜூன் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1839: சீன அதிகாரி லீன் சே ஹூவினால் பிரித்தானியர்களின் 12 இலட்சம் கிலோகிராம் ஓபியம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது ஓபியம் யுத்தத்திற்கு வழிவகுத்தது.
1937: பிரிட்டனின் மன்னர் 8 ஆம் எட்வர்ட், ஏற்கெனவே இரு தடவை திருமணமான வல்லிஸ் சிம்ஸன் எனும் அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தார். இத்திருமணம் காரணமாக அவர் அரசுரிமையை இழக்க நேரிட்டது.
1962: பிரெஞ்சு விமானமொன்று பாரிஸ் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதால் 130 பேர் பலி.
1963: அமெரிக்க விமானமொன்று பசுபிக் சமுத்திரத்தில் விழுந்ததால் 101 பேர் பலி.
1969: தென் வியட்நாம் கரையோரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய விமானந்தாங்கி கப்பலொன்று மோதியதால் அமெரிக்க யுத்த கப்பல் இரண்டாக உடைந்தது.
1982: லண்டனில், இஸ்ரேல் தூதுவர் ஷ்லோமோ ஆர்கோ துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.
1984: சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவில் மறைந்திருந்த சீக்கிய தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் 'ஒபரேஷன் புளூ ஸ்டார்' எனப் பெயரிடப்பட்டபட்ட தாக்குதலை ஆரம்பித்தது.
1998: ஜேர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தினால் 101 பேர் பலி.
2006: சேர்பியா- மொன்டேனேக்ரோ கூட்டரசிலிருந்து பிரிந்து மொன்டேனேக்ரோ சுதந்திரப் பிரகடனம் செய்தது.
2006 - 2001இல் அகற்றப்பட்ட கண்ணகி சிலையை தமிழக முதல்வர் மு.கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார்.
2007: கொழும்பில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2007: தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025