Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2017 மார்ச் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1279: யேமன் சமரில் மொங்கோலியர்கள் வென்றதால் சீனாவின் சோங் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.
1915: புளூட்டோ முதல் தடவையாக புகைப்படம் பிடிக்கப்பட்டது. எனினும் அது ஒரு கிரகமாக அங்கீகரிக்கப்படவில்லை.
1916:8 மெக்ஸிகோ புரட்சித் தளபதி பன்சோ வில்லாவை கைது செய்வதற்காக 8 அமெரிக்க விமானங்கள் கிளம்பின. அமெரிக்க வரலாற்றில் முதல் விமான தாக்குதல் பயணம் இது.
1932: சிட்னி துறைமுக பாலம் திறக்கப்பட்டது.
1944: ஹங்கேரி மீது ஜேர்மனி படையெடுத்தது.
1945: ஜேர்மனியின் தொழிற்சாலைகள், இராணுவ முகாம்கள், கடைகள், போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தையும் அழிக்குமாறு ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் உத்தரவிட்டார்.
1945: இரண்டாம் உலகப் போர்- ஜப்பானில் யூ.எஸ்.எஸ் பிராங்கிளின் என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில், 800 பேர் கொல்லப்பட்டனர்.
1972: இந்தியாவும் பங்களதேஷும், நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
1982: போக்லாந்து போர் - ஆர்ஜெண்டீனியர்கள், தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.
1988: இந்திய அரசாங்கத்திடம் நீதி கோரி, உண்ணா நோன்புப் போராட்டத்தை, அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில், ஏப்ரல் 19இல் மரணத்தைத் தழுவினார்.
2002: ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
2002: பொதுநலவாய அமைப்பிலிருந்த ஸிம்பாப்வே நீக்கப்பட்டது.
2003: ஈராக்கிற்கு எதிராக யுத்தத்தை ஆரம்பிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .