Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2022 நவம்பர் 17 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1511: பிரான்ஸுக்கு எதிராக ஸ்பெய்னும் இங்கிலாந்தும் கூட்டுச்சேர்ந்தன.
1558: இங்கிலாந்தில் எலிஸபெத் யுகம் ஆரம்பம். மகாராணியார் முதலாம் மேரி இறந்தபின் அவரின் சகோதரரி முதலாம் எலிஸபெத் ஆட்சிக்கு வந்தார்.
1800: அமெரிக்க நாடாளுமன்றம் முதல் தடவையாக வாஷிங்டன் டி.சியில் கூடியது.
1831: கொலம்பியாவிலிருந்து ஈக்குவடோரும் வெனிசூலாவும் பிரிந்தன.
1869: மத்தியத்தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறந்துவைக்கப்பட்டது.
1903: ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி போல்ஷ்விக் (பெரும்பான்மை) மேன்ஷ்விக் (சிறுபான்மை) என இரு குழுக்களாகப் பிரிந்தன.
1922: ஒட்டோமான் இராஜ்ஜியத்தின் முன்னாள் மன்னர் சுல்தான் 6ஆம் மெஷ்மெத் இத்தாலியில் தஞ்சம் புகுந்தார்.
1933: சோவியத் யூனியனை அமெரிக்கா அங்கிகரித்து.
1969: ஆயுதக்குறைப்பு தொடர்பாக அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஹெல்சிங்கியில் பேச்சுவார்த்தை நடத்தின.
1970: சோவியத் யூனியனின் லூனாகோட் -1 எனும் ரோபோ சந்திரனின் தரையில் இறங்கியது. மற்றொரு கோளில் அல்லது உபகோளில் தரையிறங்கிய முதலாவது ரோபோ இதுவாகும்.
1970: டக்ளஸ் ஏங்கல்பர்ட் என்பவர் முதலாவது கணினி மௌஸுக்கு காப்புரிமை பெற்றார்.
1997: எகிப்தில் யாத்திரிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 62 பேர் பலி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago