Ilango Bharathy / 2023 மார்ச் 14 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
1590 – பிரெஞ்சு சமயப் போர்கள்: கத்தோலிக்க அணி வீரர்களை பிரான்சின் நான்காம் என்றியின் படைகள் தோற்கடித்தன.
1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
1674 – மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வாப்பென் வான் உரொட்டர்டாம் என்ற கப்பல் கைப்பற்றப்பட்டது. 300 டச்சுக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: எசுப்பானியப் படைகள் அலபாமாவில் சார்லட் கோட்டையைக் கைப்பற்றின.
1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1898 – மருத்துவர் வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
1900 – 'தங்கத் தகுதரச் சட்டம்' அங்கீகரிக்கப்பட்டு, அமெரிக்க டாலர் நாணயம் தங்கத்தின் தரத்தில் வைக்கப்பட்டது.
1903 – பனாமா கால்வாயை அமைக்கும் பொறுப்பை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக்கொண்டது. ஆனாலும், இவ்வுடன்படிக்கையை கொலம்பிய மேலவை பின்னர் நிராகரித்தது.
1926 – கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 248 பேர் உயிரிழந்தனர், 93 பேர் காயமடைந்தனர்.
1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.
1939 – சிலோவாக்கியா செருமனியின் அழுத்தத்தில் விடுதலையை அறிவித்தது.
1942 – அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பெனிசிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: கிராக்கோவ் வதைமுகாம் மூடப்பட்டது.
1951 – கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.
1961 – இரண்டு முறிந்த அம்பு என்ற அணுவாயுதங்களைக் கொண்டு சென்ற அமெரிக்க வான்படையின் வானூர்தி கலிபோர்னியாவில் யூபா நகரில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
1978 – இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றின.
1979 – சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 44 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.
1980 – போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.
1982 – தென்னாப்பிரிக்க அரசு இலண்டன், ஆபிரிக்க தேசிய காங்கிரசு தலைமையகம் மீது குண்டு வீசியது.
1994 – லினக்சு கருனி 1.0.0 வெளியிடப்பட்டது.
1995 – உருசிய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்க விண்ணோடி ஒருவர் (நோர்மன் தகார்ட்) முதன் முதலாக சென்றார்.
1998 – தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.
2006 – சாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
2008 – திபெத்தின் லாசா நகரம் உட்பட பல பகுதிகளில் வன்முறைகளும், ஆர்ப்பாட்டப் பேரணிகளும் இடம்பெற்றன.
2019 – மொசாம்பிக்கை சூறாவளி தாக்கியதில் 1000 பேர் வரை உயிரிழந்தனர்.
9 minute ago
38 minute ago
53 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
38 minute ago
53 minute ago
55 minute ago