Ilango Bharathy / 2023 மார்ச் 27 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
1915 : குடற்காய்ச்சல் நோய்க்கிருமிகள் தொற்றிய டைஃபாய்டு மேரி என்பவர் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார்.
1941 : இரண்டாம் உலகப் போர் - யுகோஸ்லாவியாவில் அச்சு அணி ஆதரவு அரசாங்கம் யுகோஸ்லாவிய வான்படையினரால் கவிழ்க்கப்பட்டது.
1943 : இரண்டாம் உலகப் போர் - அலூசியன் தீவுகளில் அமெரிக்கக் கடற்படைக்கும் ஜப்பானுக்கும் இடையே சமர் ஆரம்பமானது.
1958 : நிக்கிட்டா குருஷேவ் சோவியத் தலைமை அமைச்சரானார்.
1964 : வட அமெரிக்காவின் வரலாற்றில் அதி ஆற்றல் வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில், 125 பேர் உயிரிழந்தனர். ஏங்கரெஜ் நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.
1968 : விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் வானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்தார்.
1969 : நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1970 : கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.
1977 : அமெரிக்காவின் இரண்டு போயிங் 747 பயணிகள் விமானங்கள் கேனரி தீவுகளில் மோதிக் கொண்டதில், 583 பயணிகள் உயிரிழந்தனர். 61 பேர் மீட்கப்பட்டனர்.
1980 : நோர்வேயின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்று வட கடலில் விபத்துக்குள்ளாகியதில், 123 பேர் உயிரிழந்தனர்.
1981 : போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 12 மில்லியன் தொழிலாளர்கள் 4 மணி நேர பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1986 : ஆவுஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரில் காவல்துறை தலைமையகத்தின் முன்னால், வாகனக் குண்டு வெடித்ததில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டுஇ 21 பேர் காயமடைந்தனர்.
1990 : அமெரிக்கா கியூபாக்கு காஸ்ட்ரோவுக்கு எதிரான வானொலி பிரசார சேவையை ஆரம்பித்தது.
1993 : யான் சமீன் சீனாவின் அரசுத்தலைவரானார்.
1998 : அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆண்களின் விறைக்க முடியாமைக்கான சிகிச்சைக்காக வயாகராவை அனுமதித்தது.
1999 : அமெரிக்க லொக்கீட் எப்-117 நைட்கோக் விமானத்தை யுகோஸ்லாவியா சாம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியது.
2002 : இஸ்ரேல், நத்தானியாவில் பாலஸ்தீனர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 29 பேர் கொல்லப்பட்டனர்.
2002 : பிரான்ஸ், நான்டேர் நகரில் நடைபெற்ற நகரசபை கூட்டம் ஒன்றை நோக்கி துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில், எட்டு நகரசபி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.
2009 : இந்தோனேசியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.
2014 : பிலிப்பீன்ஸ் அரசு மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணிப் போராளிகளுடன் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தியது.
2016 : லாகூர், குல்சன்-இ-இக்பால் பூங்காவில் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டத்தின் போது, தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்தனர்.
6 hours ago
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
25 Oct 2025