2021 ஜூலை 31, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 05

Editorial   / 2021 மே 05 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1494: கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஜமைக்காவை சென்றடைந்து, அத்தீவு ஸ்பெய்னுக்குச் சொந்தமானது என அறிவித்தார்.

1809: சுவிட்ஸர்லாந்தின் ஆராகோ மாநிலத்தில் யூதர்களுக்கு பிரஜாவுரிமை நிராகரிக்கப்பட்டது.

1821: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட் அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள சென் ஹெலீனா தீவின் சிறையில் இறந்தார்.

1936: இத்தாலிய படைகள் எத்தியோப்பிய தலைநகர் அடீஸ் அபாபாவை கைப்பற்றின.

1940: இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜேர்மன் அகதிகள் பிரிட்டனில் நாடுகடந்த அரசாங்கமொன்றை அமைத்தனர்.

1946: போர்க்குற்றம் இழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜப்பானிய இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகள் 28 பேருக்கு எதிராக தூர கிழக்கிற்கான சர்வதேச இராணுவ மன்றத்தினால்  டோக்கியோவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

1950 தாய்லாந்தில் பூமிபோல் அதுல்யேஜ் மன்னராக முடிசூடினார்.

1955: மேற்கு ஜேர்மனி முழு இறைமையுடைய நாடாகியது.

1972: இத்தாலியின் சிசிலி தீவுக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் 115 பேர் பலி.

1981: வட அயர்லாந்து சிறையில் 66 நாட்களாக உண்ணாவிரதமிருந்த 27 வயது கைதியான பொபி சான்ட்ஸ் காலமானார்.

2007: கென்ய விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 114 பேர் பலி.

2010: கிறீஸில் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .