2025 மே 21, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 13

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1922: லிபியாவின் அல் அஸீஸியா நகரில் வெப்பநிலை 58.7 பாகை செல்சியஸுக்கு உயர்ந்தது. இதுவொரு உலக சாதனையாகும்.

1971: சீனாவில் மாவோவுக்கு எதிராக புரட்சி நடத்தி தோல்வியுற்ற 2 ஆம் நிலை தலைவர் லின் பியாவோ விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்றார்.இவ்விமானம் மொங்கோலியாவில் விபத்துக்குள்ளாகி விமானத்திலிருந்த அனைவரும் பலியாகினர்.

1989: தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் ஆயர் டெஸ்மன்ட் டுட்டு தலைமையில் நடைபெற்றது.

1993: பலஸ்தீனத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் வைத்து கையெழுத்திட்டபின் இஸ்ரேலிய பிரதமர் யிட்ஸாக் ராபினும் பலஸ்தீன விடுதலை  இயக்கத் தலைவர் யஸீர் அரபாத்தும் கைகுலுக்கினர்.

2001: அமெரிக்காவில் செப்டெம்பர் 11 தாக்குதலின் பின் நிறுத்தப்பட்டிருந்த சிவில் விமான போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகியது.

2008: இந்தியாவின் டில்லியில் தொடர் குண்டுவெடிப்புகளால் 30 பேர் பலியாகினர், 130 பேர் காயமடைந்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X