Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2013 பெப்ரவரி 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1898: கியூபாவின் ஹவானா துறைமுகத்தில் அமெரிக்க கப்பலொன்று வெடித்து மூழ்கியதில் சுமார் 260 பேர் பலியாகினர். இச்சம்பவம் ஸ்பெய்னுக்கு எதிராக அமெரிக்கா யுத்தப் பிரகடனம் செய்வதற்கு வழிவகுத்தது.
1906: பிரித்தானிய தொழிற்கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
1909: மெக்ஸிகோவிலுள்ள திரையரங்கொன்று தீப்பற்றியதால் சுமார் 250 பேர் பலி.
1933: அமெரிக்க ஜனாதிபதி பிராங்;ளின் டி ரூஸ்வெல்ட்டை கொல்வதற்கு துப்பாக்கிதாரியொருவன் முயன்றான். ஆனால் ரூஸ்வெல்டுக்குப் பதிலாக சிகாகோ மேயர் அன்டன் ஜே. சேர்மாக் இச்சம்பவத்தில் காயமடைந்து மார்ச் 6 ஆம் திகதி உயிரிழந்தார்.
1942: ஜப்பானியர்களின் கடும் தாக்குதலைத் தொடர்ந்து சிங்கப்பூரிலிருந்த பிரித்தானிய தளபதி ஜெனரல் ஆர்தர் பேர்சிவல் சரணடைந்தார். சுமார் 80,000 இந்திய, பிரித்தானிய, அவுஸ்திரேலிய படையினர் யுத்தக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
1950: சோவியத் யூனியன், சீனாவுக்கிடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1961: பெல்ஜியத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் அமெரிக்க பிகர் ஸ்கேட்டிங் அணியினர் உட்பட 73 பேர் பலி.
1970: டொமினிக்கன் குடியரசில் ஏற்பட்ட விமான விபத்தில் 102 பேர் பலி.
1982: கனடாவில் எண்ணெய் அகழ்வுத்தளமொன்று கடலில் மூழ்கியதால் 84 ஊழியர்கள் பலி.
1989: ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் யூனியன் படையினர் அனைவரும் வெளியேறிவிட்டதாக சோவியத் யூனியன் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
2003: ஈராக் யுத்தத்திற்கு எதிராக சுமார் 600 நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. 80 லட்சம் முதல் 3 கோடி பேர்வரை இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றியிருப்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக இது விளங்குகிறது.
2005: வீடியோவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு, மற்றவர்களின் வீடியோக்களையும் பார்க்க வாய்ப்பளிக்கும் யூ ரியூப் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
2 hours ago
2 hours ago