Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2012 டிசெம்பர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1913: உலகில் முதல் தடவையாக குறுக்கெழுத்துப்போட்டி நியூயோர்க் வேர்ல்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
1941: இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான் - தாய்லாந்து நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1967: உலகில் முதலாவது இதய மாற்று சத்திர சிகிச்சைக்குள்ளான லூயிஸ் வாஷ்கன்ஸி, 18 நாட்களின்பின் தென்னாபிரிக்காவில் காலமானார்.
1968: சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் அப்பலோ பயணச் சோதனைகளில் முதல் தடவையாக (அப்பலோ 8) மனிதர்களை ஏற்றிச்சென்ற விண்கலம் ஏவப்பட்டது.
1969: நியூயோர்க்கில் ஓரினப் பாலியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது.
1969: சகல விதமான இனப் பாகுபாட்டையும் ஒழிக்கும் சாசனத்தை ஐ.நா. அங்கீகரித்தது.
1988: லண்டனிலிருந்து நியூயோர்க்கிற்குப் புறப்பட்ட பான் அமெரிக்கன் விமானம் ஸ்கொட்லாந்தின் லொக்கர்பீ எனும் இடத்திற்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது குண்டுவெடித்து சிதறியதால் 270 பேர் (தரையிலிருந்த 11 பேர் உட்பட) கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தில் லிபிய பிரஜைகள் இருவர் தொடர்புபட்டனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து பிரிட்டன் - லிபிய நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக முறுகல் நிலவியது.
1992: நெதர்லாந்து விமானமொன்று பாரோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதால் 56 பேர் பலி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .