Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2013 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1582: பாப்பரசர் 13 ஆம் கிறகரி, கிறகரியன் கலண்டரை அமுல்படுத்தியதால் அதை பின்பற்றிய இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயன் ஆகிய நாடுகளில் ஒக்டோபர் 4 ஆம் திகதிக்குப்பின் மறுநாள் ஒக்டோபர் 15 ஆம் திகதியாக மாற்றப்பட்டது. எனவே இந்நாடுகளில் 1582 ஆம் ஆண்டு ஒக்டோபர் 5 முதல் 14 வரையான திகதிகள் இருக்கவில்லை.
1789: பிரெஞ்சு புரட்சியின்போது, பாண் விலை குறைப்பு உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 16 ஆம் லூயி மன்னனுக்கு எதிராக வேர்செய்ல்ஸ் அரண்மனையை நோக்கி பெண்கள் மாபெரும் பேரணியொன்றை ஆரம்பித்தனர்.
1864: கொல்கத்தா நகரில் சூறாவளியினால் பேரழிவு: 60,000 பேர் பலி.
1905: ரைட் சகோதரர்களில் ஒருவரான வில்பர் ரைட் தமது விமானத்தில் 39 நிமிடங்களில் 24 மைல்தூரம் பறந்தார். 1908 ஆம் ஆண்டுவரை அது உலக சாதனையாக இருந்தது.
1947: முதல்தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வெள்ளை மாளிகை உரையை அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் நிகழ்த்தினார்.
1948: சோவியத் யூனியனின் அஸ்காபாத்தில் (தற்போது துருக்மேனிஸ்தானின் பிராந்தியம்) இடம்பெற்ற பூகம்பத்தில் 111,000 பேர் பலி.
1962: முதலாவது ஜேம்ஸ்பான்ட் திரைப்படம் - டொக்டர் நோ- வெளியாகியது.
1994: சுவிட்ஸர்லாந்தில் மத அமைப்பொன்றைச் சேர்ந்த 48 பேர் கூட்டாக தற்கொலை.
2000: சேர்பியாவின் பெல்கிறேட் நகரில் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக்கை இராஜினாமாச் செய்யக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
2001: பத்திரிகையாளர் ரொபர்ட் ஸ்டீவன்ஸன் (63), அமெரிக்காவில் அந்ரெக்ஸ் தாக்குலில் பலியான முதல் நபரானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025