Menaka Mookandi / 2015 ஜூன் 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1901: குக் தீவுகளை நியூஸிலாந்து தன்னுடன் இணைத்துக்கொண்டது.
1938: இரண்டாவது சீன - ஜப்பான் யுத்தம் ஆரம்பமாகியது.
1956: இலங்கையில் கல்லோயா கலவரம் ஆரம்பமாகியது.
1981: ஈரானில் 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் குறைந்தபட்சம் 2000 பேர் பலி.
1990: கிழக்கிலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் கொல்லப்பட்டனர்.
2002: அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தார் என ஐக்கிய அமெரிக்க காங்கிரசினால் அறிவிக்கப்பட்டது.
2004: நாசாவின் கசீனி - ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.
2007: கடும் மழை, வெள்ளம் காரணமாக பங்களாதேஷில் 118பேரும் தெற்கு சீனாவில் 66பேரும் கொல்லப்பட்டனர்.
2009: H1N1 காய்ச்சலின் திரபாக 'பன்றிக்காய்ச்சல்' நோய் பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தானம் அறிவித்தது.
2011: பாகிஸ்தானின் பெஷாவர் சந்தையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 34பேர் கொல்லப்பட்டதுடன் 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026