2025 மே 19, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 18

Menaka Mookandi   / 2015 ஜூன் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1429: ஜோன் ஒவ் ஆர்க் எனும் சிறுமியின் தலைமையிலான பிரெஞ்சு படை, சேர் ஜோன் பாஸ்டொல்வ் தலைமையிலான பிரித்தானிய படைகயை பாட்டே சமரில் தோற்கடித்தது.

1812: அமெரிக்க நாடாளுமன்றம் பிரிட்டனுக்கு எதிராக யுத்தப்பிரகடனம் செய்தது.

1815: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் வாட்டர்லூ யுத்ததில் நெல்சன் தலைமையிலான ஆங்கிலேய படையிடம் தோற்கடிக்கப்பட்டு அரசுரிமையை இழந்தான்.

1908: பிரேஸிலில் ஜப்பானிய குடியேற்றம் ஆரம்பமாகியது.

1953: எகிப்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.

1953: ஜப்பானின் டோக்கியோ நகரில் அமெரிக்க விமானப்படை விமானமொன்று விபத்துக்குள்ளானதால்  129 பேர் பலி.

1972: லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானமொன்று  விபத்துக்குள்ளானதால் 118 பேர் பலி.

1985: விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.

2001: நாகா கிளர்ச்சிக்காரருக்கும் இந்திய அரசுப்படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை நீடிக்க மணிப்பூரில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

2004: ஜெனீவாவில் CERN எனப்படும் ஐரோப்பிய துகள்-இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 2 மீற்றர் உயரமுடைய நடராஜர் சிலை நிறுவப்பட்டது.

2006: கசக்ஸ்தான் கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X