Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2017 மே 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1494: கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஜமைக்காவை சென்றடைந்து, அத்தீவு ஸ்பெய்னுக்குச் சொந்தமானது என அறிவித்தார்.
1809: சுவிட்ஸர்லாந்தின் ஆராகோ மாநிலத்தில் யூதர்களுக்கு பிரஜாவுரிமை நிராகரிக்கப்பட்டது.
1821: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட் அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள சென் ஹெலீனா தீவின் சிறையில் இறந்தார்.
1936: இத்தாலிய படைகள் எத்தியோப்பிய தலைநகர் அடீஸ் அபாபாவை கைப்பற்றின.
1940: இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜேர்மன் அகதிகள் பிரிட்டனில் நாடுகடந்த அரசாங்கமொன்றை அமைத்தனர்.
1946: போர்க்குற்றம் இழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜப்பானிய இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகள் 28 பேருக்கு எதிராக தூர கிழக்கிற்கான சர்வதேச இராணுவ மன்றத்தினால் டோக்கியோவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
1950 தாய்லாந்தில் பூமிபோல் அதுல்யேஜ் மன்னராக முடிசூடினார்.
1955: மேற்கு ஜேர்மனி முழு இறைமையுடைய நாடாகியது.
1972: இத்தாலியின் சிசிலி தீவுக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் 115 பேர் பலி.
1981: வட அயர்லாந்து சிறையில் 66 நாட்களாக உண்ணாவிரதமிருந்த 27 வயது கைதியான பொபி சான்ட்ஸ் காலமானார்.
1991: ஈழத்து பெண் கவிஞர் சிவரமணி தனது 23ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
2006: சூடான் அரசுக்கும் சூடான் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
2007: கென்ய விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 114 பேர் பலி.
2010: கிறீஸில் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago