Menaka Mookandi / 2016 பெப்ரவரி 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1562: பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்லாந்தர்கள், கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
1565: ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.
1700: சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
1811: எகிப்திய மன்னன் முகமது அலி, கடைசி மாம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.
1815: இத்தாலியின் தீவான எல்பாவில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட், பிரான்ஸ் திரும்பினான்.
1873: முதலாவது பாவனைக்குகந்த முதலாவது தட்டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.
1896: ஹென்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.
1899: இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (Tகெ Cஎய்லொன் Pஎனல் Cஒடெ) நடைமுறைக்கு வந்தது.
1901: இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954இல் யாழ்ப்பாணத்தில் 33,879பேர் பதிவாயினர்.
1912: அமெரிக்காவில் அல்பேர்ட் பெரி என்பவர் விமானத்திலிருந்து பரசூட் மூலம் குதித்த முதல் மனிதர்களில் ஒருவரானார்.
1914: உலக தபால் சேவையில் சீனா இணைந்தது.
1936: ஹூவர் அணைக்கட்டு கட்டிமுடிக்கப்பட்டது.
1941: இரண்டாம் உலகப் போர் - பல்கேரியா அச்சு நாடுகள் அணியில் இணைந்தது.
1943: இரண்டாம் உலகப் போர் - பிஸ்மார்க் கடல் போர் ஆரம்பமானது.
1947: சர்வதேச நாணய நிதியம் தனத நிதிச் செயற்பாடுகளை ஆரம்பித்தது.
1949: டச்சுக்களிடம் இருந்து யாக்யகர்த்தாவை இந்தோனீசியா கைப்பற்றியது.
1953: ஜோசப் ஸ்டாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.
1954: ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் மாளிகை மீது புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
1966: சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வீனஸ் கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1973: சூடானில் சவூதி அரேபியாவின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.
1975: அவுஸ்திரேலியாவில் வர்ணத் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1977: சார்லி சப்ளினின் உடல், சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
1980: சனி கோளின் ஜானுஸ் என்ற சந்திரன் இருப்பதை வோயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.
1981: ஐரியக் குடியரசு இராணுவ உறுப்பினர் பொபி சான்ட்ஸ், வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1992: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிவதாக பொஸ்னியா-ஹேர்ஸகோவினா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1995: யாஹு நிறுவனம் கூட்டிணைக்கப்பட்டது.
2002: ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2003: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதலாவது விசாரணை நெதர்லாந்தின் ஹேக் நகரில் ஆரம்பமானது.
2006: ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago