Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஒக்டோபர் 17 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1610: பிரான்ஸில் 13 ஆம் லூயி மன்னனுக்கு முடிசூடப்பட்டது.
1888: தோமஸ் அல்வா எடிசன் முதலாவது திரைப்படத்திற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.
1907: மார்கோணியின் நிறுவனம் அத்திலாந்திக் சமுத்திரத்திற்கிடையிலான முதலாவது வயர்லெஸ் சேவையை ஆரம்பித்தது.
1912: பல்கேரியா, கிறீஸ், சேர்பியா ஆகியன ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக யுத்தப்பிரகடனம் செய்தன.
1917: முதல் உலக யுத்தத்தில் பிரிட்டன் முதல் தடவையாக ஜேர்மனி மீது குண்டுத்தாக்குதல் நடத்தியயது.
1933: விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்ரைன் நாஸி ஜேர்மனியிடமிருந்து தப்பி அமெரிக்காவுக்குச் சென்றார்.
1941: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பலொன்று முதல் தடவையாக அமெரிக்க கப்பலொன்றைத் தாக்கியது.
1941: கிறீஸின் சேரெஸ் நகரிலுள்ள ஆண்கள் அனைவரையும் ஜேர்மன் படைகள் கொலை செய்து வீடுகளுக்குத் தீ வைத்தன.
1966: பொட்ஸ்வானா, லெசத்தோ ஆகியன ஐ.நாவில் இணைந்தன.
1968: மெக்ஸிகோ ஒலிம்பிக் 200 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற இரு தொமி ஸ்மித், வெண்கலம் வென்ற ஜோன் கார்லோஸ் ஆகிய அமெரிக்க கறுப்பின வீரர்கள் இருவரும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, பரிசளிப்பின்போது அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்படுகையில் தலைகுணிந்தவாறு, கறுப்பு நிற கையுறை அணிந்த கையை உயர்த்திக்காட்டி மௌனமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியமை சர்ச்சையை ஏற்படுத்தியது.
1973: சிரியா மீதான இஸ்ரேலின் யுத்ததிற்கு ஆதரவாக விளங்கிய மேற்கு நாடுகளுக்கு எண்ணெய் விநியோகிப்பதற்கு ஒபெக் அமைப்பு தடைவிதித்தது.
1979: அன்னை தெரேசாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1980: பிரிட்டனின் இரண்டாம் எலிஸபெத் மகாராணியார் வத்திகானுக்கு விஜயம். வத்திகானுக்கு விஜயம் செய்த முதலாவது பிரிட்டிஸ் அரசகுடும்பத் தலைவர் இவர்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago