2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றின் இன்று: ஏப்ரல் 24

Editorial   / 2021 ஏப்ரல் 24 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

1704: அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்றங்களின் முதலாவது செய்திப் பத்திரிகையான "த பொஸ்டன்" நாளிதழ் வெளியிடப்பட்டது.

1800: அமெரிக்க காங்கிரஸ் நூலகம் நிறுவப்பட்டது.

1863: கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில், அமெரிக்கப் பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

1895: உலகத்தைத் தனியாளாக, முதற்றடவையாகச் சுற்றிய யோசுவா சிலோக்கம் மாசச்சூசெட்ஸ், பொஸ்டனில் இருந்து ஸ்பிறே என்ற படகில் புறப்பட்டார்.

1908: லூசியானாவில் ஏற்பட்ட புயல் காற்றால், 143 பேர் உயிரிழந்தனர்.

1916: அயர்லாந்துக் கிளர்ச்சியாளர்கள், பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக, டப்ளினில் போராட்டங்களில் இறங்கினர்.

1955: இந்தோனேசியாவின் பண்டுங் நகரில், ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவாதம், மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1957: ஐ.நா அமைதிப்படை வரவழைக்கப்பட்டதை அடுத்து, சுயஸ் கால்வாய், மீண்டும் திறக்கப்பட்டது.

1965: டொமினிக்கன் குடியரசில், உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.

1993: இந்தியாவில், பஞ்சாயத்து இராச்சியம் அமைக்கப்பட்டது.

2004: ஐக்கிய அமெரிக்கா, லிபியா மீது 18 ஆண்டுகளுக்கு முன்னர் விதித்த பொருளாதாரத் தடையை நீக்கியது. லிபியா, பேரழிவு ஆயுதங்களை அழிக்க உடன்பட்டது.

2006: நேபாளத்தில், மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து, 2002இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க, மன்னர் உத்தரவிட்டார்.

2007: பலாலி இராணுவத்தளம் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

2013: பங்களாதேசின் டாக்கா நகரிலுள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், 1,129 பேர் உயிரிழந்தனர். 2,500 பேர் காயமடைந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .