2024 மே 02, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : ஏப்ரல் 01

Janu   / 2024 ஏப்ரல் 01 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

286 – உரோமைப் பேரரசர் தியோக்கிளேத்தியான் தனது தளபதி மாக்சிமியனை துணைப் பேரரராக அறிவித்து, உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதிக்குப் பொறுப்பாக நியமித்தார்.

325 – இளவரசர் சின் செங்தி தனது 4-வது அகவையில், சீனாவின் கிழக்கு யின் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

1545 – பொலிவியாவில் பெருமளவு வெள்ளிப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பட்டோசி என்ற நகரம் அமைக்கப்பட்டது.

1625 – இடச்சு-போர்த்துக்கீசப் போர்: 52 எசுப்பானிய, போர்த்துக்கீசக் கப்பல்கள் பாகியா நகரை மீண்டும் கைப்பற்றப் போரில் இறங்கின.

1826 – சாமுவேல் மோரி உள் எரி பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.

1867 – சிங்கப்பூர் பிரித்தானியக் குடியேற்ற நாடாகியது.

1873 – அட்லாண்டிக் என்ற பிரித்தானியாவின் நீராவிக் கப்பல் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் மூழ்கியதில் 547 உயிரிழந்தனர்.

1924 – இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இட்லருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனாலும் ஒன்பது மாதங்களில் அவர் விடுதலையானார்.

1933 – செருமனியில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்சிகள் யூத வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்குமாறு ஒரு-நாள் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

1933 – ஆங்கிலேய துடுப்பாட்ட வீரர் வால்ட்டர் அமொண்ட் 336 நியூசிலாந்துக்கு எதிரான தேர்வுப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 336 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார்.

1935 – இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

1937 – ஏடன் பிரித்தானியாவின் குடியேற்ற நாடானது.

1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக இராணுவத் தலைவர் பிரான்சிஸ்கோ பிராங்கோ அறிவித்தார். கடைசி குடியரசுப் படையினர் சரணடைந்தனர்.

1941 – ஈராக்கில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அப்தல்லாவின் அரசு கலைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .