Janu / 2024 ஏப்ரல் 08 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1929: இந்திய சுதந்திர போராட்டத்தின்போது பகத் சிங், பதுகேஷ்வர் தத் ஆகியோர் டெல்லி சட்டசபையில் குண்டுவீசினர்.
1950: இந்தியாவும் பாகிஸ்தானும் லியாகத் - நேரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
1961: பாரசீக வளைகுடாவில் எம்.வி. தாரா கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பவத்தில் 281 பேர் பலி.
1970: எகிப்தில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டுவீசியதால் 46 பாடசாலை சிறார்கள் பலி.
1973: உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காஸோ காலமானார்.
1985: சுமார் 2,000 பேர் பலியான போபால் விச வாயு கசிவுக்கு சம்பவத்திற்காக யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக இந்தியா வழக்குத் தொடுத்தது.
1992: இதய சத்திர சிகிச்சைக்கான குருதி பரிமாற்றத்தின் மூலம் தனக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டதாக ஓய்வு பெற்ற அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான ஆர்தர் ஆஷ் அறிவித்தார்.
2004: டார்பூர் மோதலை முடிக்கு கொண்டுவரும் முகமாக சூடான் அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
2005: பாப்பரசர் 2 ஆம் அருளப்பர் சின்னப்பரின் இறுதிக்கிரியையில் சுமார் 40 லட்சம் பேர் பங்குபற்றினர்.
15 minute ago
22 minute ago
32 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
32 minute ago
39 minute ago