Janu / 2024 ஏப்ரல் 09 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1937 : கமிக்காஸ் என்ற வானூர்தி இலண்டன் வந்தது. இதுவே ஜப்பானில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு வந்த முதலாவது வானூர்தி ஆகும்.
1940 : இரண்டாம் உலகப் போர் - வெசெரியூபங் நடவடிக்கை – டென்மார்க், நோர்வே மீது ஜேர்மனி தாக்குதலை ஆரம்பித்தது.
1947 : டெக்சாஸ், ஒக்லகோமா, கன்சாஸ் மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் உயிரிழந்தனர். 970 பேர் காயமடைந்தனர்.
1948 – ஜெருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள் இஸ்ரேலியரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1953 : வார்னர் பிறதேர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான 'ஹவுஸ் ஒவ் வக்ஸ்' ஐ வெளியிட்டது.
1959 : மேர்க்குரித் திட்டம் - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது.
1967 : போயிங் 737 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
1969 : முதலாவது பிரித்தானியத் தயாரிப்பான கான்கோர்டு 002 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
1984 : யாழ்ப்பாணம் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தினரின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.
1984 : இலங்கை இராணுவ வண்டி மீது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.
16 minute ago
23 minute ago
33 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
33 minute ago
40 minute ago