2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 17

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

1492: ஆசியாவிலிருந்து வாசனைத் திரவியங்களைக் கொண்டுவருவது தொடர்பாக கிறிஸ்டோபர் கொலம்பஸுக்கும் ஸ்பெய்ன் அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1895: முதலாவது சீன – ஜப்பான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக இருநாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1912: சைபீரியாவில் வேலை நிறுத்தம் செய்த தங்கச்சுரங்க ஊழியர்கள் மீது ரஷ்ய படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் சுமார் 150 பேர் பலி.

1941: ஜேர்மனியிடம் யூகோஸ்லாவியா சரணடைந்தது.

1946: பிரான்ஸிடமிருந்து சிரியா சுதந்திரம் பெற்றது.

1961: கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோவின் ஆட்சியை அகற்றுவதற்காக அமெரிக்காவிலிந்து சி.ஐ.ஏ.யினால் பயிற்றுவிக்கப்பட்ட 1,400 கியூப அகதிகள் கியூபாவில் தரையிறக்கப்பட்டனர். இவர்களில் 100பேர் காஸ்ட்ரோவின் படைகளின் தாக்குதலில் பலியாகினர். 1,189பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

1971: இந்தியாவின் கல்கத்தா நகரில் முஜிபுர் ரஹ்மான் தலைமையில்  பங்களாதேஷ் அரசாங்கம் அமைக்கப்பட்டது.

1975: கம்போடியாவில் கெமர் ரூச் படைகள், தலைநகர் நாம்பென்னைக் கைப்பற்றினர். கம்போடிய அரசு சரணடைந்தது.

1986: 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.

2004: இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா, பெங்களூரில் விமான விபத்தில் உயிரிழந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .