Janu / 2024 ஏப்ரல் 18 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1930: அன்றைய தினம் செய்திகள் இல்லையென பி.பி.சி வானொலி அறிவித்தது.
1945: ஜேர்மனியின் ஹேலிகோலன்ட் தீவின்மீது சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் தாக்குதல் நடத்தின.
1954: எகிப்தில் கமால் அப்துல் நாசர் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1955: புகழ்பெற்ற பௌதிகவியல் விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் காலமானார்.
1955: இந்தோனேஷியாவின் பான்டூங் நகரில் நடைபெற்ற முதலாவது ஆசிய-ஆபிரிக்க மாநாட்டில் 29 நாடுகள் பங்குபற்றின.
1983: லெபனானின் பெய்ரூத் நகரில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
1988: ஈரானிய கடற்படைக்கு எதிராக அமெரிக்கா பாரிய கடற்படைத் தாக்குதலை ஆரம்பித்தது.
1992: ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி மொஹமட் நஜிபுல்லாவின் அரசாங்கத்திற்கு எதிரகா ஜெனரல் அப்துல் ரஸித் டோஸ்டம்இ அஹமட் ஷா மசூத்துடன் இணைந்து காபூல் நகரை கைப்பற்ற கிளர்ச்சி செய்தார்.
1996: லெபனானின் ஐ.நா. வளாகத்தில் இஸ்ரேலிய படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதால் 106 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
2007: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களினால் 198 பேர் கொல்லப்பட்டதுடன் 251 பேர் காயமடைந்தனர்.

17 minute ago
24 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
24 minute ago
34 minute ago
41 minute ago