Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
1902 : குவாத்தமாலாவில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800 – 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1906 : அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் உயிரிழந்தனர். நகரம் தீப்பிடித்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1909 : ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை பத்தாம் பயசினால் புனிதப்படுத்தப்பட்டார்.
1912 : கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.
1930 : பிபிசி வானொலி தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது.
1942 : இரண்டாம் உலகப் போர் - ஜப்பானின் டோக்கியோ, யோக்கோகாமா, கோபே, நகோயா ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.
1945 : இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியின் எலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
1946 : அனைத்துலக நீதிமன்றம் முதல் தடவையாக நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் கூடியது.
1949 : அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
1954 : ஜமால் அப்துல் நாசிர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1955 : 29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய - ஆப்பிரிக்க மாநாடு இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆரம்பமானது.
1958 : இலங்கையில் பண்டா - செல்வா ஒப்பந்தம் முறிவடைந்தது.
1980 : சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் குடியரசுத் தலைவரானார். ராபர்ட் முகாபே பிரதமரானார்.
1983 : லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
1993 : பாகிஸ்தான் அரசுத்தலைவர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
1996 : லெபனானில் ஐ.நா கட்டடம் ஒன்றின் மீது இஸ்ரேல் எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2007 : பகுதாது நகரில் பரவலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 198 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமடைந்தனர்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago