R.Tharaniya / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025:கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், அந்நாட்டின் நேரப்படி, திங்கட்கிழமை (21) காலை 7.35 மணிக்கு நித்திய இளைப்பாறினார். அவர், நித்திய இளைப்பாற்று அடையும் போது அவருக்கு வயது 88 ஆகும்.
2025:ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (20) வத்திக்கானின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தோன்றிய 24 மணி நேரத்திற்குள் போப்பின் மரணம் நிகழ்ந்துள்ளது.
1945: சோவியத் யூனியின் செஞ்சேனைப் படையினர் ஜேர்மனியின் பேர்லின் புறநகர் பகுதிகளை முற்றுகையிட்டனர்.
1960: பிரேஸில் தலைநகர் பிரஸில்லியா உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
1962: சியாட்டில் உலக சந்தை திறக்கப்பட்டது. 2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவில் திறக்கப்பட்ட முதலாவது உலக சந்தை இது.
1975: தென் வியட்நாம் ஜனாதிபதி என்குயென் வான் தியூ ராஜினாமா செய்தார்.
1987: கொழும்பு புறக்கோட்டையில் தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய வாகன குண்டுத் தாக்குதலில் 113 பேர் பலியாகினர்.
1989: சீன மறுசீரமைப்புத் தலைவர் ஹியூ யவோபாங்கை நினைவுகூரும் முகமாக சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் தியனமென் சதுக்கத்தில் கூடினர்.
1993: பொலிவியாவின் முன்னாள் சர்வாதிகாரி லூயிஸ் கார்சியா மேஸாவுக்கு கொலை, களவு, மோசடி, அரசியலமைப்பு மீறல் குற்றச்சாட்டில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை விதித்தது.
2004: ஈராக்கின் பஸ்ரா நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 74 பேர் பலியாகினர்.
13 minute ago
24 minute ago
31 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
31 minute ago
50 minute ago