Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 07 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1944 – இரண்டாம் உலகப் போர்: அவுசுவிட்சு வதை முகாமில் இடம்பெற்ற கிளர்ச்சியில் யூதக் கைதிகள் அங்கிருந்த சவக்காலையைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
1949 – கம்யூனிச செருமன் மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.
1950 – அன்னை தெரேசா பிறரன்பின் பணியாளர்கள் சபையை நிறுவினார்.
1950 – சீனா திபெத்து மீதான தாக்குதலை ஆரம்பித்தது.
1958 – பாக்கித்தான் அரசுத்தலைவர் இசுக்காண்டர் மிர்சா நாட்டின் அரசியலமைப்பைக் கலைத்து இராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
1959 – சோவியத் விண்கலம் லூனா 3 சந்திரனின் அதி தூரத்தியப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.
1977 – நான்காவது சோவியத் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 1985 – புவேர்ட்டோ ரிக்கோவில் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 200 பேர் வரை உயிரிழந்தனர்.
1987 – சீக்கிய தேசியவாதிகள் இந்தியாவில் இருந்து காலித்தானின் விடுதலையை அறிவித்தனர். ஆனாலும், எந்நாடுகளும் இதனை அங்கீகரிக்கவில்லை.
2000 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: ஹிஸ்புல்லா போராளிகள் மூன்று இசுரேலியப் பாதுகாப்புப் படையினரை கைப்பற்றினர்.
2001 – ஆப்கானித்தான் மீது அமெரிக்கா மூன்று முறை விமானத்தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் உதவியுடன் ஆரம்பமாகியது.
2004 – கம்போடிய மன்னர் நொரடோம் சீயனூக் பதவியில் இருந்து விலகினார்.
2007 – கொழும்பில் முதல் நாள் கடத்தப்பட்ட யாழ் பல்கலைக்கழக கணிதப் பேராசிரியர் பொ. மகினனின் சிதைந்த உடல் வெள்ளவத்தையில் கண்டுபிடிக்கப்பட்டது.
2008 – சிறுகோள் 2008 டிசி3 சூடானுக்கு மேலாக 37 கிமீ உயரத்தில் வெடித்தது.
2016 – மேத்யூ சூறாவளியின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்தது.
3 minute ago
10 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
2 hours ago
05 Nov 2025