R.Tharaniya / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
1492: ஆசியாவை அடைவதற்காக ஐரோப்பாவிலிருந்து மேற்குத்திசையில் பயணம் செய்த கிறிஸ்டோபர் கொலம்பஸ், மேற்கிந்திய தீவுகளை (பஹாமஸ்) அடைந்தார். தான் தென்னாசியாவை அடைந்துவிட்டதாக அவர் நம்பினார்.
1775: அமெரிக்க கடற்படை நிறுவப்பட்டது.
1792: முதலாவது கொலம்பஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
1901: எக்ஸிகியூட்டிவ் மான்ஸன் என அழைக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்கு ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட், வெள்ளை மாளிகை என உத்தியோகபூர்வமாக பெயரிட்டார்.
1918: அமெரிக்காவின் மினசோட்டோ மாநிலத்தில் பரவிய காட்டுத்தீயினால் 453 பேர் பலி.
1957: கனடாவின் பிரதம மந்திரி லெஸ்டர் பொவ்லெஸ் - சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றார்.
1968: ஸ்பெயினிடமிருந்து கிண்ணியா சுதந்திரம் பெற்றது.
1976: காலஞ்சென்ற மாவோ சேதுங்கிற்குப் பின், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஹுவா குவோபெங் தலைமை தாங்குவார் என சீனா அறிவித்தது.
1983: ஜப்பானிய முன்னாள் பிரதமர் டனாகா ககுய் 2 மில்லியன் டொலர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு காரணமாக 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1984: பிரித்தானிய பிரதமர் மார்ரெட் தச்சரையும் அமைச்சர்களையும் கொல்வதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. இதில் இருவர் பலியாகினர்.
1999: பாகிஸ்தானில் ஜெனரல் பர்வேஸ் முஷாரப், இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
2000: அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.எஸ். கோல், யேமனின் ஏடன் துறைமுகத்தில் வைத்து தற்கொலைத் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. 17 பேர் பலி; 40 பேர் காயம்.
2002: இந்தோனேசியாவின் பாலி தீவில் இரவு விடுதியொன்றில் குண்டுவெடிப்பு; 202 பேர் பலி.
11 minute ago
19 minute ago
33 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
33 minute ago
33 minute ago