Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஒக்டோபர் 22 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1838: போர்த்துக்கலில் மன்னன் பெர்னாண்டோ, ஆண் வாரிசின்றி இறந்ததால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டி சிவில் யுத்தத்திற்கு வழிவகுத்தது.
1707: மத்தியத் தரைக்கடலில் சிசிலி தீவுக்கருகில் நான்கு பிரித்தானிய கப்பல்கள் தவறான முறையில் செலுத்தப்பட்டதன் காரணமாக கடலில் மூழ்கி ஆயிரக்கணக்கான படையினர் பலியாகினர்.
1784: அலாஸ்கா பிராந்தியத்தின் கோடியாக் தீவில் ரஷ்யா கொலனியொன்றை ஆரம்பித்தது.
1797: பாரிஸில் 1000 மீற்றர் (3200 அடி உயரத்திலிருந்து) அந்ரே ஜாக் கார்னரின் என்பவர் முதல் பரசூட் மூலம் குதித்தார். உலகின் முதலாவது பரசூட் குதிப்பாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
1877: ஸ்கொட்லாந்து சுரங்க விபத்தில் 207 பேர் பலி.
1924: மேடைப்பேச்சாற்றலை வளர்க்கும் சர்வதேச அமைப்பான 'டோஸ்ட்மாஸ்ட்டர் இன்டர்நெஷனல்' ரால்ப் சி ஸ்மெட்லியினால் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
1944: பிரித்தானிய விமானப்படை விமானங்கள் ஜேர்மனியின் கசெல் நகரில் தாக்குதல். 10 ஆயிரம் பேர் பலி.
1953: பிரான்ஸிடமிருந்து லாவோஸ் சுதந்திரம் பெற்றது.
1957: வியட்நாம் யுத்தத்தில் முதல் அமெரிக்க படைவீரர் பலி.
1960: பிரான்ஸிடமிருந்து மாலி சுதந்திரம் பெற்றது.
1962: கியூபாவில் சோவியத் அணுஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி அறிவித்தார்.
1963: கனடாவின் தேசிய கொடியை நாடாளுமன்ற பல்கட்சி குழுவொன்று வடிவமைத்தது.
1975: சோவியத் யூனியனின் வனேரா9 விண்கலம் வெள்ளி கிரகத்தில் தரையிறங்கியது.
2007: அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் பாரிய தாக்குதல்.
2008: சந்திரயான்-1 விண்கலத்தை இந்தியா சந்திரனுக்கு ஏவியது.
9 hours ago
14 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Sep 2025