R.Tharaniya / 2025 ஒக்டோபர் 09 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
1900 : குக் தீவுகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.
1910 : மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.
1914 : முதலாம் உலகப் போர் - பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரம் ஜேர்மனியிடம் வீழ்ந்தது.
1934 : யுகொசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர், பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் லூயி பார்த்தோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
1940 : இரண்டாம் உலகப் போர் - பிரிட்டன் சண்டை - ஜேர்மனியின் லூப்டுவாபே படைகள் இலண்டன் புனித பவுல் பேராலயம் மீது இரவு நேரத்தில் குண்டுகள் வீசின.
1941 : பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அரசுத்தலைவரானார்.
1942 : வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 ஆஸ்திரேலியாவின் சுயாட்சியை அங்கீகரித்தது.
1962 : உகாண்டா பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது.
1963 : வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
1966 : வியட்நாம் போர் - தென் வியட்நாமில் பின் தாய் நகரில் தென் கொரியப் படைகள் நடத்திய தாக்குதலில் 168 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1967 : சே குவேரா பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1970 : கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.
1980 : திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் தலாய் லாமாவைச் சந்தித்தார்.
1981 : பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.
1983 : ரங்கூனில் தென் கொரிய அரசுத்தலைவர் சுன் டூ-குவான் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
1987 : யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.
2001 : இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
2004 : ஆப்கானித்தானில் முதற்தடவையாக பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
2006 : வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.
2012 : பாக்கித்தானிய தாலிபான்கள் மலாலா யூசப்சையிவைப் படுகொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
12 minute ago
20 minute ago
34 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
34 minute ago
34 minute ago