Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 ஓகஸ்ட் 21 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1911 : லியனார்டோ டா வின்சியின் மோனா லிசா ஓவியம் பாரிசின் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.
1920 : ஏ. சபாபதி ஓய்வு பெற்றதை அடுத்து சேர் அ.கனகசபை இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
1942 : இரண்டாம் உலகப் போர் – ரஷ்யாவின் எல்பிரஸ் மலை உச்சியில் நாட்சி ஜேர்மனியின் கொடி நாட்டப்பட்டது.
1944 : இரண்டாம் உலகப் போர் – கனடிய, போலந்துப் படைகள் பிரான்சின் முக்கிய நகரான பலேசைக் கைப்பற்றின.
1957 : சோவியத் ஒன்றியம் ஆர்-7 என்ற முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது.
1959 : அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் அவாயை அமெரிக்காவின் 50ஆவது மாநிலமாக இணைக்கும் ஆணைக்கு கையெழுத்திட்டார்.
1963 : தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்தத் தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.
1971 : பிலிப்பீன்ஸ், மணிலாவில் லிபரல் கட்சி தேர்தல் பிரசாரத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் மார்க்கோஸூக்கு எதிரான பல வேட்பாளர்கள் காயமடைந்தனர்.
1982 : லெபனான் உள்நாட்டுப் போர் - லெபனானில் இருந்து பலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் வெளியேறுவதைக் கண்காணிக்க பன்னாட்டுப் படையினர் பெய்ரூத் வந்து சேர்ந்தனர்.
1983 : பிலிப்பீன்சு எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.
1986 : கமரூனில் நியோஸ் ஏரி எரிமலையில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில், 20 கி.மீ சுற்றளவில் 1,800 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1988 : நேபாள - இந்திய எல்லைப்புறத்தில் 6.9 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில் 1,450 பேர் வரை இறந்தனர்.
1991 : லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1991 : சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.
1993 : நாசா மார்சு ஒப்சர்வர் விண்கலத்துடனான தொடர்பை இழந்தது.
1994 : மொரோக்கோவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 44 பேரும் உயிரிழந்தனர்.
1995 : அமெரிக்காவில் சியார்ச்சியா மாநிலத்தில் பிரேஸில் வானூர்தி ஒன்று தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 29 பேரில் 9 பேர் உயிரிழந்தனர்.
2007 : சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.
2013 : சிரியாவில் கோட்டா என்ற இடத்தில் வேதித் தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2014 : பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை - இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் ஹமாஸ் இயக்கத்தின் மூன்று மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர்.
2014 : குவாத்தமாலாவில் பெல் 206 உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
30 Apr 2025
30 Apr 2025
30 Apr 2025