Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2023 ஓகஸ்ட் 31 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1907 : ஆங்கிலேய - ரஷ்ய ஒப்பந்தம் - வடக்குப் பாரசீகத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை ஐக்கிய இராச்சியமும், தென்கிழக்கு பாரசீகம் மற்றும் ஆப்கானித்தானில் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பை ரஷ்சியாவும் அங்கிகரித்தன. திபெத்து மீது இரு வல்லரசுகளும் தலையிடுவதில்லை என முடிவெடுத்தன.
1920 : போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்செவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.
1940 : அமெரிக்காவின் வர்ஜீனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 25 பேரும் உயிரிழந்தனர்.
1941 : இரண்டாம் உலகப் போர் - செர்பியத் துணை இராணுவப் படைகள் ஜேர்மனியப் படைகளை லோசினிக்கா சமரில் வென்றன.
1945 : ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1957 : ஐக்கிய இராச்சியத்திடமிருந்து மலாயா கூட்டமைப்பு (இன்றைய மலேசியா) விடுதலை பெற்றது.
1958 : கம்போடிய மன்னர் நொரடோம் சீயனூக் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.
1962 – டிரினிடாட் மற்றும் டொபாகோ ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1963 : வடக்கு போர்ணியோ சுயாட்சி பெற்றது.
1978 : இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.
1986 : சோவியத் ஆட்மிரல் நகீமொவ் என்ற பயணிகள் கப்பல் கருங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதி மூழ்கியதில், 423 பேர் உயிரிழந்தனர்.
1986 : கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில், 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் கொல்லப்பட்டனர்.
1987 : தாய்லாந்து விமானம் கோ பூகத் அருகே கடலில் வீழ்ந்ததில், 83 உயிரிழந்தனர்.
1991 : சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடானது.
1994 : ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.
1997 : வேல்ஸ் இளவரசி டயானா பாரிசில் வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.
1998 : வட கொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது.
1999 : புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில், 65 பேர் உயிரிழந்தனர்.
1999 : மாஸ்கோவில் குடியிருப்புகள் மீதான தொடர் குண்டுவெடிப்புகள் ஆரம்பித்தது.
2005 : பக்தாதில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, 953 பேர் உயிரிழந்தனர்.
2006 : 2004 ஆகத்து 22 இல் களவாடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின் அலறல் என்ற பிரபலமான ஓவியம் நோர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது.
2016 : பிரேசில் அரசுத்தலைவர் டில்மா ரூசெஃப் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
12 minute ago
16 minute ago