Janu / 2023 செப்டெம்பர் 07 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1911 : இலூவா அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தைத் திருடியதாக, சந்தேகத்தின் பேரில் பிரெஞ்சுக் கவிஞர் கியோம் அப்போலினேர் கைது செய்யப்பட்டார்.
1921 : கத்தோலிக்கரின் மரியாயின் சேனை என்ற அமைப்பு டப்ளின் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1923 : பன்னாட்டுக் காவலகம் (இன்டர்போல்) ஆரம்பிக்கப்பட்டது.
1927 : முதலாவது முழுமையான இலத்திரனியல் தொலைக்காட்சிப் பெட்டி பைலோ பார்ன்சுவர்த் என்பவரால் அமைக்கப்பட்டது.
1929 : பின்லாந்தில் 'குரு' என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.
1936 : கடைசி தாசுமேனியப் புலி ஓபார்ட்டில் இறந்தது.
1940 : இரண்டாம் உலகப் போர் - தி பிளிட்ஸ் - நாட்சி ஜேர்மனி பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் இலண்டன் நகர் மீது 300 டொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 50 நாள்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.
1943 : டெக்சாசில் உணவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர்.
1945 : இரண்டாம் உலகப் போர் - வேக் தீவில் 1941 டிசம்பர் முதல் நிலை கொண்டிருந்த ஜப்பானியப் படைகள் அமெரிக்கக் கடற்படையிடம் சரணடைந்தன.
1945 : இரண்டாம் உலகப் போர் - பெர்லின் வெற்றி ஊர்வலம் இடம்பெற்றது.
1953 : நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1965: இந்திய-பாகிஸ்தான் போர், 1965 - இந்திய எல்லையில் தனது படைகளைக் குவிக்கப்போவதாக சீனா அறிவித்தது.
1970 : யோர்தானில் அரபுக் கரந்தடிப் படைகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை ஆரம்பமானது.
1977 : கனடா, ஒண்டாரியோவில் 300 மீற்றர் உயரத் தொலைத்தொடர்புக் கோபுரத்தின் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதியதில் கோபுரம் உடைந்து வீழ்ந்தது.
1977 : பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.
1978 : கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
1978 : பல்கேரிய அதிருப்தியாளர் கியோர்கி மார்க்கொவ் இலண்டன் வாட்டர்லூ பாலத்தைக் கடக்கையில் பல்கேரிய இரகசிய காவற்படையினன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1986 : தென்னாபிரிக்காவின் ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதலாவது கறுப்பின ஆயராக டெசுமான்ட் டுட்டு நியமிக்கப்பட்டார்.
1988 : சோவியத் மீர் விண்வெளி நிலையத்தில் ஒன்பது நாள்கள் தங்கியிருந்த ஆப்கானிஸ்தானின் முதலாவது விண்வெளி வீரர் அப்துல் அகாது மொகுமாண்டு சோயூஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார்.
1999 : ஏதன்சில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 143 பேர் கொல்லப்பட்டனர்.
1999 : இலங்கை இராணுவத்தாரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.
2005 : எகிப்தில் முதலாவது பல-கட்சி அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது.
2011 : ரஷ்சியாவில் இடம்பெற்ற விமான விபத்தில், லோக்கோமோட்டிவ் யாரொஸ்லாவ் பனி வளைதடியாட்ட அணியின் அனைத்து வீரர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.
2017 : 2017 சியாப்பஸ் நிலநடுக்கம் - தெற்கு மெக்சிக்கோவில் இடம்பெற்ற 8.2 அளவு நிலநடுக்கத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.

15 May 2026
15 May 2026
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 May 2026
15 May 2026
15 May 2026