2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 08

Ilango Bharathy   / 2021 ஜூன் 08 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

1783: ஐஸ்லாந்தின் லேக்கி எரிமலை வெடித்தது. தொடர்ச்சியாக 8 மாதங்கள் எரிமலை குழம்பு வெளியாகிய நிலையில் சுமார் 9000 பேர் பலியாகினர். 7 வருடகால பஞ்சம் ஆரம்பித்தது.

1941: 2 ஆம் உலக யுத்தத்தில் சிரியா, லெபனான் மீது நேச நாடுகள படையெடுத்தன.

1953: அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் டோர்னடோ  சுழற்காற்றினால் 115 பேர் பலி.

1959: அமெரிக்க தபால் திணைக்களம் ஏவுகணை மூலம் தபால் அனுப்புவதற்கான சோதனையை மேற்கொண்டது. அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பலான யூ.எஸ்.எஸ். பார்பெரோவிலிருந்து தபால்கள் அடங்கிய ஏவுகணையொன்று ஏவப்பட்டது. எனினும் இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை.

1984: அவுஸ்திரேலியாவின் நியூசௌத் வேல்ஸ் மாநிலத்தில் ஒருபாலினத் திருமணம் சட்டபூர்வமானதாக்கப்பட்டது.

1992: முதலாவது உலக கடல் நாள் கொண்டாடப்பட்டது.

1995: படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.

2006: அல் குவைதாவின் ஈராக்கியத் தலைவர் அபு முசாப் அல்-ஜர்காவி அமெரிக்க விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்.

2007: அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது.

2007: இலங்கையின் புத்தளத்தில் 9 உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

2007: அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் காற்று, மற்றும் வெள்ளத்தினால் 9 பேர் கொல்லப்பட்டனர்.

2009: வட கொரியாவுக்கு அத்துமீறி நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டில், அமெரிக்கா ஊடகவியலாளர்கள் இருவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .