Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 ஜூன் 16 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1903 : போர்ட் தானுந்து நிறுவனம் அமைக்கப்பட்டது.
1903 : ருவால் அமுன்சென் தனது முதலாவது வடமேற்குப் பெருவழியின் கிழக்கு - மேற்கு நோக்கிய கடற்பயணத்தை ஒஸ்லோவிலிருந்து ஆரம்பித்தார்.
1911 : ஐ.பி.எம் நிறுவனம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.
1911 : 772 கிராம் எடையுள்ள விண்கல் விஸ்கொன்சின் கில்போர்ன் நகரில் வீழந்தது.
1940 : லிதுவேனியாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்தது.
1944 : ஐக்கிய அமெரிக்கா, 14 வயதான ஜார்ஜ் ஸ்டின்னி என்பவரை தூக்கிலிட்டது.
1948 : மலாயன் கம்யூனிஸ் கட்சி உறுப்பினர்கள் மூன்று பிரித்தானியத் தோட்ட அதிகாரிகளைக் கொன்றதை அடுத்து, அங்கு அவசர காலச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
1955 : அர்கெந்தீனாவில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில், 364 பேர் கொல்லப்பட்டனர். 800 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
1958 : 1956 ஹங்கேரியப் புரட்சியில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1963 : வஸ்தோக் 6 - ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா, உலகின் முதலாவது விண்வெளி வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
1976 : தென்னாபிரிக்காவில் ஸ்வெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காவற்றுறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
1997 : அல்சீரியாவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் பொதுமக்கள் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2010 : பூட்டான் புகையிலைப் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்த முதலாவது நாடானது.
2012 : ஐக்கிய அமெரிக்க வான்படையின் தானியங்கி போயிங் எக்ஸ் - 37 விண்ணூர்தி 469 நாட்கள் பயணத்தின் பின்னர் பூமி திரும்பியது.
2012 : சீனா சென்சூ 9 விண்கலத்தை லியு யங் என்ற பெண் உட்பட மூவருடன் வெற்றிகரமாக ஏவியது.
2013 : வட இந்திய மாநிலமான உத்தர கண்டத்தில் பெரும் வெள்ளம், நிலச்சரிவுகள் இடம்பெற்றதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
38 minute ago
54 minute ago