Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 25 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1935 : சோவியத் ஒன்றியத்துக்கும் கொலம்பியாவுக்கும் இடையில் தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது.
1940 : இரண்டாம் உலகப் போர் - பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜேர்மனியிடம் சரணடைந்தது.
1944 : இரண்டாம் உலகப் போர் - நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.
1950 : வட கொரியாவின் தென் கொரியா மீதான படையெடுப்பை அடுத்து கொரியப் போர் ஆரம்பமானது.
1975 : இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையைப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
1975 : போர்த்துகல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.
1983 : இலண்டனில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்றது.
1991 : குரோவாசியாவும் சுலோவீனியாவும் யுகோசுலாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தன.
1996 : சவூதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.
1997 : ஆளில்லா புரோகிரஸ் விண்கலம் ரஷ்சிய விண்வெளி நிலையம் மீருடன் மோதியது.
1998 : வின்டோஸ் 98 முதற்பதிப்பு வெளியானது.
2007 : கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.
2017 : ஏமனில் 200,000 க்கும் அதிகமானோர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டது.
8 minute ago
23 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
35 minute ago